siruppiddy

வியாழன், 18 ஜூன், 2015

இதுவரை இன்புளுவென்சா வைரஸ் தாக்கம் காரணமாக 24 பேர் பலி

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் இன்புளுவென்சா எச்.1 என்1 வைரஸ் காரணமாக இதுவரை 24 பேர் பலியாகியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இவர்களில் 10 பேர் கர்ப்பிணி பெண்கள் எனவும் இது தாய், சேய் மரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
காய்ச்சலுக்கான நோய் அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சகல கர்ப்பிணி தாய்மாருக்கும் எச்.1என்1 எதிர்க்கும் வைரஸ் மருந்துகள் வழங்கப்படுகின்றனர்.
இதனை வைத்தியசாலையில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 13 ஜூன், 2015

மீண்டும் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை மீண்டும் !

வெளிநா­டு­களில் புலம்­பெ­யர்ந்­துள்ள இலங்­கை­யர்கள் அனை­வரும் மீளவும் நாட்­டிற்கு வருகை தர­வேண்டும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­க­ள­வர்கள் என்ற பேதம் பாராமல் அனை­வரும் புலம்­பெ­யர்ந்த இலங்­கையர் என்ற வகையில் நாட்டின் ஐக்­கி­யத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அழைப்பு
 விடுத்துள்ளார்.
கொழும்பு கோட்­டை­யி­லுள்ள வெளிவி­வ­கார அமைச்சில் நேற்று புலம்­பெ­யர்ந்த 150 இலங்­கை­யர்­க­ளுக்கு இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்ட பின்னர் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு
 தெரி­வித்தார்.
அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்- ‘உல­க­ளா­விய ரீதியல் புலம்­பெ­யர்ந்த இலங்­கை­யர்கள் இலட்­சக்­க­ணக்­கானோர் வசித்து வரு­கின்­றனர். எனினும் எமது நாட்டில் 1987 ஆம் ஆண்­ட­ள­வி­லேயே இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கு­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் அறி­முகம் செய்­து­வைக்­கப்­பட்­டது. இதன்­படி குறித்த சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­தி­லி­ருந்து இது­வ­ரையில் சுமார் 34 ஆயிரம் பேரிற்கு இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது.
இது­வ­ரைக்கும் 2000 விண்­ணப்­பங்கள் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரி­மைக்கு 
கிடைக்­கப்­பெற்­றாலும் புதிய ஒழுங்­கு­மு­றைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் முதலில் விண்ணம் செய்த 450 பேரிற்கு இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் இரண்டாம் கட்டம் என்ற வகையில் நேற்று 150 பேரிற்கு இரட்டை பிர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டது.
இதன்­பி­ர­காரம் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை தொடர்ந்தும் வழங்­கப்­பட்டு வந்த போதிலும் 2011 ஆம் ஆண்­ட­ளவில் முன்­னைய ஆட்­சியின் போது
 இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை இடை­நி­றுத்­தப்­பட்­டது. எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஆட்­சியின் போது மீளவும் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்கும் திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ளது. அத்­தோடு திட்­ட­மிட்ட சில­ருக்கு மாத்­தி­ரமே இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரி­மையை முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் வழங்­கினர்.
ஆனால் தற்­போது புலம்­பெ­யந்­தோ­ருக்­கான கத­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ளன. எனவே வௌிநா­டு­க­ளி­லுள்ள புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் மீளவும் இலங்­கைக்கு வருகை தர­வேண்டும். நாட்டின் இன ஐக்­கி­யத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இன பேதம் பாராமல் புலம்பெயர்ந்த இலங்கை என்ற வகையில் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த தருணத்திலும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அதேபோன்று புலம்பெயர்ந்தவர் தமது திறமைகளை இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்பு செய்ய வேண்டும்’ என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 9 ஜூன், 2015

தொழிற்பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

யாழ் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி...இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் முழு நேர மற்றும் பகுதிநேரதொழிற்பயிற்சி கற்கைநெறிகளை நடாத்திவருகின்றது. தற்போது 2015 2ம் காலாண்டுக்கான கற்கைநெறிகளுக்கானவிண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இக்கற்கைநெறிகள்அனைத்தும் தேசியதொழில் தகைமை(NVQ) சான்றிதழுக்கானபயிற்சியாகும். 
இக்கற்கைநெறிகள் கற்கவிரும்புவர்கள் தங்கள் பதிவுகளைஅலுவலகநேரத்தில் மாவட்டஅலுவலகம், 1ஆம்மாடி,வீரசிங்கம் மண்டபம், இல.12,கே.கே.எஸ் வீதி,யாழ்ப்பாணம் தொ.பே.இல (0212227949) எதிர்வரும் 15.06..2015 திகதிக்குமுன்னர் மேற்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
-தொழிற்பயிற்சி அதிகாரசபை

திங்கள், 8 ஜூன், 2015

தலை, முகமாலையில் உடல் நேற்றிரவு மீட்பு!

எழுதுமட்டுவாள் பகுதியிலும் தலையும் முகமாலைப் பகுதியில் முண்டமுமாக சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு எழுதுமட்டுவாள் ரயில் நிலையப் பகுதிக்கு அருகில் தலையும் முகமாலைப் பகுதியில் அதன் முண்டமும் காணப்பட்டதாக அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சடலத்தை மீட்ட பளை பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். தலை காணப்பட்ட இடத்தில் ஒரு சோடி செருப்பும் பியர் ரின்னும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சடலத்துக்குரியவர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத
 தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 4 ஜூன், 2015

மேலும் 5 இந்திய மீனவர்கள் கச்சதீவுக்கருகில் கைது!

கச்சதீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 5 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தலைமன்னாருக்கு அழைத்துவரப்பட்டு கடற்றொழில் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் கச்சதீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தம்மை பின்தொடர்ந்து வருமாறு இலங்கை கடற்படையினர் உத்தரவிட்டதன் அடிப்படையிலேயே அவர்கள் கடற்படையினருடன் சென்றதாக ராமேஸ்வர மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினமும் 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமையும்  குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையினரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 மத்திய, மாநில அரசுகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க தவறினால், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் தொழில் புறக்கணிப்பில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், கடலுக்கு சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து நேற்று ,11 மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.
 இதன்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசாங்கங்களை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



நவற்கிரி காலநிலை