siruppiddy

சனி, 28 செப்டம்பர், 2013

பலர் கைது யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய


சுன்னாகம் பொலிசாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து நள்ளிரவு வரை பரவலாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பலரின்மீது வழக்குகளும் தாக்கல் செய்யப்படவுள்ளன.

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.துஸ்மிந்தா தலைமையில் பொலிசார் தமது பிரிவுக்கு உட்பட்ட பல இடங்களிலும் இந் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

வீதிச்சோதனை நடவடிக்கைகளின் போது வீதி நடைமுறைகளை பின்பற்றாது வாகனங்களை செலுத்திய இருபத்தைந்து பேரும் மது போதையில் வாகனம் செலுத்திய இரண்டு பேரும் பிடிக்கப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மற்றும் பொது இடங்களில் இருந்து மதுப்பாவனையில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உடுவில் பிரதேசத்தில் பகிரங்கப் பிடியானைக்கு உள்ளாகிய ஒருவரும் மற்றும் உடுவில் குப்பிளான் பகுதிகளில் இருந்து பிடியானை பிறப்பிக்கப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் இவர்கள் இன்று நிதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

வியாழன், 26 செப்டம்பர், 2013

உலகிலேயே 2வது மிக பெரிய பயணிகள் கப்பல் !!!

 
பயணிகள் கப்பல் நீங்கள் பார்த்தால் கண்டிப்பாக வியப்படைவீர்கள்,,,வினோதம்,
{காணொளி}
}

புதன், 25 செப்டம்பர், 2013

பிறந்த நாள் வாழ்த்து:ப. செல்வகுமார்


நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் செல்வகுமார் அவர்கள் இன்று தனது(25.09.13) இருபத்தேழாவது  பிறந்தநாளை  தனது கிராமத்து நண்பர்களுடன் இனிதே கொண்டாடுகின்றார்.இவரை குடும்ப உறவுகள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இந்த உறவு இணையத்தின் ஊடாக இவரது  பிரான்ஸ் நண்பர்களான

இ.மதுசன்,உ.பாலச்சந்திரன் இருவரும்   நிறைந்த  இறை அருள் பெற்று   பார்போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் இன்று போல் என்றும் சீரும்சிறப்பும்பெற்று  பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.இந்த உறவை http://www.navarkiri.com/ நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

பெண்ணின் சடலம் குளத்தில் : அட்டனில் சம்பவம்


அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்திலுள்ள குளத்தில் பெண் ஒருவரின் சடலத்தை அட்டன் பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.
அப்பகுதி வழியாக வீதி ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் குழுவே இந்த சடலத்தை கண்டுப்பிடித்துள்ளது.

55 வயது மதிக்கதக்க தனலட்சுமி என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு தற்போது சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

இராட்சத மீன்!கடற்பரப்பில் பிடிபட்ட!!!


நயினாதீவு பிரதேச கடற்பரப்பில் இராட்சத மீன் ஒன்று அப்பகுதி மீனவரின் வலையில் சிக்கிய நிலையில் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீன் பிடிதொழிலுக்காக இன்று அதிகாலை நயினாதீவு பகுதியில் இருந்து சென்ற ஒருவரின் வலையிலேயே இவ் மீன் சிக்கியுள்ளது. சுமார் 25 அடி நீளமும், 1000 கிலோ எடையும் கொண்ட இந்த மீனை பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.(படங்கள்)





 

புதன், 18 செப்டம்பர், 2013

யாழில் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு புகைப்படங்கள் இணைப்பு

 

)யாழ். பழைய பூங்கா வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்று திறந்துவைக்கப்பட்டது. வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இந்த சிறுவர் பூங்கா திறந்துவைக்கப்பட்டது.வட மாகாண பிரதம செயலாளர் ரமேஸ் விஜயலக்சுமி, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். ஆளுநநரின் நிதியொதுக்கீட்டில் இந்த பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள் இணைப்பு}






திங்கள், 16 செப்டம்பர், 2013

மின்சாரம் தாக்கி 10 வயது சிறுமி பலி



பொகவந்தலாவையில் மின்சாரம் தாக்கியதில் 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி வீட்டில் தனியே இருந்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற மின்ன

ழுத்தியை உபயோகிக்கும் போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

நவற்கிரி காலநிலை