siruppiddy

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நான்கு வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி !

யாழ்ப்பாணம் – அராலி தெற்கு, வட்டுக்கோட்டையில் அயல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் அதே இடத்தைச் சேர்ந்த சசிகரன் சுதர்சன் எனவும், இவர் முன்பள்ளியில் கல்விகற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவனது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 7 ஏப்ரல், 2016

அனைத்து மருந்துத் தட்டுப்பாட்டுக்கு 2017 இல் முற்றுப் புள்ளி!

எதிர் வரும் 2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்துகளை பிரச்சினையின்றி வழங்க புதிய வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் பல்வேறு காரணங்களுக்காக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன 
குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் 2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துகளில் 90 வீமானவற்றை விரைவாக பெற்றுக் கொடுக்க தான் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 5 ஏப்ரல், 2016

காப்பகங்களில் இலங்கையில் 435 சிறுவர் 15 ஆயிரம் சிறார்கள்

இலங்கை முழுவதும் இயங்கிவரும் சிறுவர் காப்பகங்களில் சுமார் 15 ஆயிரம் சிறுவர்கள் தங்கியிருப்பதாக ஐக்கிய இலங்கை சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் நாடு முழுவதிலும் இருக்கும் தன்னார்வத் தொண்டு நிலையங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டுவரும் 435 சிறுவர் காப்பகங்களில் உள்ள சிறுவர்களின் அடிப்படை மனித உரிமைகளும் அவர்களின் மனநலமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் 
சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய காப்பகங்களில் வசிக்கும் சிறுவர்களின் கல்வி அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு அவர்கள் தங்கியுள்ள காப்பகங்களுக்கு அருகிலுள்ள அரச பாடசாலைகளில் அனுமதி வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற நியதி இருந்தபோதிலும்,
அது பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படாமல் உதாசீனம் செய்யப்படுவது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும்,
இந்தச் சிறுவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு விரைவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உதவியை நாடவுள்ளதாகவும் இலங்கை சிறுவர் நன்னடத்தை சங்கத்தின் பேச்சாளர் ஒருவர்
 தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 26 மார்ச், 2016

கேரள கஞ்சாவுடன் 19 வயது இளைஞன் கைது!

வவுனியாவில் 14 கிலோ 560 கிராம் கேரளா கஞ்சா பொதிகளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருந்து ஹயஸ்ரக வாகனம் ஒன்றில் 14 கிலோ 560 கிராம் கேரளா கஞ்சாவுடன் வந்த இளைஞனே வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வைத்து நேற்றுக் காலை 9.00 மணியளவில் வவுனியா பொலிஸாரால் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவ லின் அடிப்படையில் குறித்த நபரின் வாகனத்தை மறித்து சோதனை செய்த போது அதில் இருந்து பெறுமதி வாய்ந்த கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞனை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் இதுவரையில் பிடிக்கப்பட்ட அதிகூடிய கேரளா கஞ்சா இதுவெனவும் பொலிஸார் 
குறிப்பிடுகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 22 மார்ச், 2016

திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிகனடா முன்வந்துள்ளது

இலங்கையில் திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு, உதவிகளை வழங்குவதற்கு கனடா முன்வந்துள்ளது.
இலங்கையின் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்றத்தில் சந்தித்த
 கனேடியத் தூதுவர் ஷல்லி வைற்றிங் அம்மையார், இது குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
திரவ எரிவாயு மின் உற்பத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும், ஏனைய தேவையான வசதிகளையும் கனடா வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலக கவனத்தை இலங்கை பெற்றிருப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான உதவிகளை பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்றை இலங்கையில் ஆரம்பிப்பது தொடர்பாகவும், கனேடியத் தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 20 மார்ச், 2016

பிள்ளையை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்திததாயும்பலி !

பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரிய பளை பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளையும் கிணற்றில் வீழந்து பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தனது ஒன்றரை வயதுப் பிள்ளை கிணற்றுக்குள் வீழந்து விட்டதைக் கண்ட தாய், தனது பிள்ளையைக் காப்பாற்ற கிணற்றுக்குள் 
குதித்திருக்கின்றார்.
இந்நிலையில் தாயும் பிள்ளையும் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
பெரிய பளையைச் சேர்ந்த தயபோதினி ஜெயரஞ்சன் (வயது 31) என்ற தாயும், அவரது பிள்ளையான ஜெயரஞ்சன் ஜினோஜன் என்ற ஆண் குழந்தையுமே இறந்தவர்களாவர்.
இவர்கள் இருவரினது சடலங்கைளையும் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ள பளை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 2 மார்ச், 2016

ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அட்டகாசங்கள்!!!

முல்லைத்தீவி,தேவிபுரம் ஆ பகுதியில் அமைந்துள்ள அ,த,க,பாடசாலையில் மாணவர்கள் மீது ஆசிரியர்களின் அட்டகாசங்கள்!!!
இன்றும் வளமைபோலவே மாணவர்கள் அப் பாடசாலைக்கு கல்வி கற்க சென்றிருந்தனர் அங்கு அவர்கள் சென்ற துவிச்சக்கரவண்டிகளை ஓரமாக மாணவர்கள் விடவில்லையென கூறி குறித்த மாணவர்களின் துவிச்சக்கரவண்டிகளுக்கு காற்றைக் களட்டி விட்டதுடன் வால்க்கட்டைகளை ஆசிரியர்கள் வேலிக்கு வெளியால் வீசியதுடன் துவிச்சக்கரவண்டிகளை பாடசாலைக்கு பின்புறமாக மறைத்து
 வைத்துள்ளனர்
குறித்த மாணவர்கள் தங்கள் துவிச்சக்கரவண்டிகளுக்கு நிகழ்ந்த பரிதாப நிலையை கண்டு அதிற்சி அடைந்ததுடன் மிகுந்த வேதனையும் அடைந்தனர் தங்கள் வண்டிகளை உறுட்டி சென்ற மாணவர்கள் முன் வீதிக்கு ஓராமாக அமைந்துள்ள துவிச்சக்கரவண்டி திருத்தினரின் உதைவியை நாடிய போது,அவர் கூறிய விடையத்தை இங்கே தருகின்றோம்-என்னிடம் உங்கள் 33 வண்டிகளுக்கும் வால்க்கட்டைக்கு எங்கே போவது எனச்சொல்லி கைவிரித்துள்ளார்
ஆசிரியர்களின் செயலால் மாணவர்கள் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை தங்கள் வண்டிகளை கொழுத்தும் வெய்யிலில் தள்ளிச்சென்று வீடு சேர்த்தனர்
இது போன்ற ஆசிரியர்களின் நயவஞ்சக செயல்கள் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் தொடச்சியாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை