siruppiddy

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

காப்பகங்களில் இலங்கையில் 435 சிறுவர் 15 ஆயிரம் சிறார்கள்

இலங்கை முழுவதும் இயங்கிவரும் சிறுவர் காப்பகங்களில் சுமார் 15 ஆயிரம் சிறுவர்கள் தங்கியிருப்பதாக ஐக்கிய இலங்கை சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் நாடு முழுவதிலும் இருக்கும் தன்னார்வத் தொண்டு நிலையங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டுவரும் 435 சிறுவர் காப்பகங்களில் உள்ள சிறுவர்களின் அடிப்படை மனித உரிமைகளும் அவர்களின் மனநலமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் 
சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய காப்பகங்களில் வசிக்கும் சிறுவர்களின் கல்வி அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு அவர்கள் தங்கியுள்ள காப்பகங்களுக்கு அருகிலுள்ள அரச பாடசாலைகளில் அனுமதி வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற நியதி இருந்தபோதிலும்,
அது பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படாமல் உதாசீனம் செய்யப்படுவது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும்,
இந்தச் சிறுவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு விரைவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உதவியை நாடவுள்ளதாகவும் இலங்கை சிறுவர் நன்னடத்தை சங்கத்தின் பேச்சாளர் ஒருவர்
 தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை